உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

புன்செய்புளியம்பட்டி: கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூர்,கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாசி மகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. உற்சவர் வேணுகோபால சுவாமி, பாமா-ருக்மணியுடன் உட்பிரகார மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, சுதர்சன ஹோமம், சமண திருமஞ்சனம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில், தம்பதியருடன் வேணுகோபால சுவாமி அருள் பாலித்தார். மாலை வரை, சிறப்பு அலங்காரத்தில், சுவாமி ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !