உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு

தெப்பக்குளத்தில் விளக்கு வழிபாடு

மாசிமகத்தன்று சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வித்தியாசமான வகையில் விளக்கு வழிபாடு நடக்கும். இங்குள்ள தெப்பக்குளக்கரையில் தங்களின் கோரிக்கை நிறைவேறியதற்காக பெண்கள் விளக்கு ஒன்றை ஏற்றி வைப்பர். அந்த விளக்கை இவ்வாண்டில் கோரிக்கை வைப்பவர்கள், தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.  அடுத்த மாசிமகம் வரை வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபடுவர். இவ்வாறு செய்பவர்களுக்கு ஓராண்டிற்குள் கோரிக்கை நிறைவேறும். அவர்கள் அடுத்து வரும் மாசிமகத்தன்று குளக்கரையில் விளக்கேற்ற வேண்டும். திருமணம், குழந்தைப் பேறு, கடன்பிரச்னை, வேலைவாய்ப்பு, எதிரிபயம் முதலான நியாயமான கோரிக்கைகளுக்காக வேண்டுதல் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !