/
கோயில்கள் செய்திகள் / ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் மாசிமகம் விசேஷ திருமஞ்சனம்
ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் மாசிமகம் விசேஷ திருமஞ்சனம்
ADDED :2055 days ago
திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு விஷேச திருமஞ்சனம் நடந்தது.
உற்ஸவர் கல்யாண ஜெகநாதப் பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், திரவியப்பொடிகளுடன் திருமஞ்சனம் செய்யப்பட்டது.கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டன. மாலையில் கருட சேவையில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப் பெருமாள் திருப்புல்லாணி நான்குரத வீதிகளிலும் உலா வந்தார். சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.