திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம்
ADDED :2071 days ago
பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகையாறு படித்துறையில் உள்ள சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மக விழா நடந்தது.இக்கோயிலில் சண்முக அர்ச்சனை, இலக்குமணன் தலைமையில் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பால்குட விழா நிறைவடைந்தது
சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை சைக்கிள் பயணக் குழு சார்பில் 44 வது ஆண்டு திருச்செந்துாருக்கு பக்தர்கள் பயணம் சென்றனர். இக்குழுவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு பஜார், முதுகுளத்தூர் ரோடு வழியாக திருச்செந்தூர் நோக்கி சைக்கிளில் பயணித்தனர். ஆறு நாட்கள் பயணத்திற்குப்பின் முருகனை பக்தர்கள் தரிசிப்பர்.