உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் சிவன் கோவில் 13ம் தேதி கும்பாபிஷேகம்

தியாகதுருகம் சிவன் கோவில் 13ம் தேதி கும்பாபிஷேகம்

தியாகதுருகம்:தியாகதுருகம் சிவன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரன் கோவில் பக்தர்கள் முயற்சியால் திருப்பணி துவங்கி புதுப்பிக்கப்பட்டது.அதனையொட்டி வரும் 13ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜை இன்று விநாயகர் வழிபாட்டுடன் யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. கும்பாபிஷேக விழாவில் சிவனடியார்கள் தமிழில் பூஜைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவில் திருவாரூர் தியாகராஜ பெருமான், திருவாசக சித்தர் தாமோதரன், திருவாரூர் நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !