உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை முக்தீஸ்வரர் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்

மதுரை முக்தீஸ்வரர் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்

மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக் கதிர்கள் நந்தி சிலையின் மீது விழுந்தது.

மதுரை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான தெப்பக்குளம் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் இன்று (மார்ச் 11) முதல் 23 வரை தினமும் காலை 6:35 முதல் 6:45 மணி மற்றும் காலை 7:00 முதல் 7:10 மணி வரை சூரிய ஒளி கதிர்கள் பிரவேசிக்கும் அற்புதத்தை முன்னிட்டு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு, பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !