13ல் கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில் தெப்போற்சவம்
ADDED :2350 days ago
மாமல்லபுரம்:கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், வரும், 13ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது.தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமையில், தெப்போற்சவம் நடைபெறும். அதன்படி, வரும், 13ம் தேதி காலை, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, இரவு, தெப்போற்சவம் நடக்கிறது.வழிபட குவியும் பக்தர்களுக்கு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், பஸ் இயக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்வம், அரசுத் துறையினரிடம் அறிவுறுத்திஉள்ளார்.