அழகன்குளம் அம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :2071 days ago
தேவிபட்டினம்:தேவிபட்டினம் அருகே சத்திரம், அழகன்குளம் அம்மன் கோவில் குடியிருப்பு சிங்காரவேலன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக விரதமிருந்த பக்தர்கள் ரதகாவடி, மயில் காவடி எடுத்தும் பாலபிஷேகம் செய்தும் வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை அம்மன்கோவில் குடியிருப்பு, ஆனந்தபுரம், அழகன்குளம் சத்திரம் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.