குடந்தை சக்கரபாணி உற்சவருக்கு தங்க திருவடி காணிக்கை
ADDED :2146 days ago
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், சக்கரபாணி கோவில் உற்சவருக்கு, அரை கிலோ தங்கத்தாலான திருவடி காணிக்கையாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர், கும்பகோணம் பகவத் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில், சக்கரபாணி சுவாமியின் உற்சவருக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரை கிலோ எடையில் தங்கத்தால் ஆன திருவடி நேற்று காணிக்கையாக செலுத்தப்பட்டது. இதை கோவிலில் ஒப்படைக்க நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பின் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஸ்ரீதர், ஸ்ரீதரன், பாட்ராட்ஜாரியார் உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். உற்சவருக்கு முதலில், தங்கத்தால் திருவடி செய்து வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உற்சவருக்கான பல்வேறு பாகங்கள் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது என அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.