உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் மாஸ்க் அணிந்து பிரசாதம் வினியோகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் மாஸ்க் அணிந்து பிரசாதம் வினியோகம்

தி.மலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாஸ்க் அணிந்து பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வெளிமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கெரோனா வைரஸ் எதிரொலியாக, பெரும்பாலோனார், மாஸ்க் அணிந்தே, கோவிலுக்கு வரும் அவர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், விற்பனை செய்யப்படும் பிரசாதம் வழங்கும் பணியாளர்கள், மாஸ்க் அணிந்தபடி பிரசாதம் வினியோகித்து வருகின்றனர். பக்தர்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், கைகள் தொடும் இடங்கள், ஆகியவற்றில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகத்தில், சாணம் தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !