உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன கும்பாபிஷேகம்

ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன கும்பாபிஷேகம்

சேலம்: ராகவேந்திரா சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில், திரளானோர் தரிசனம் செய்தனர். சேலம், சூரமங்கலம், சாஸ்திரி நகரிலுள்ள, ராகவேந்திரா சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தின், 25ம் ஆண்டையொட்டி, மூன்றாவது மகா கும்பாபிஷேகம், நேற்று காலை, மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, யாக சாலை பூஜை, வேதபாராயணம், விஷ்ணு ஹோமம், ராகவேந்திர சுவாமிகள் அஷ்டோத்ர மந்த்ர ஹோமம் ஆகியவை நடந்தது. உடுப்பி பலிமாருமடம் வித்யா தீஸதீர்த்தர் சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை, பஜனை மணடலி, தொட்டில் பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ராகவேந்திரா டிவைன் சொசைட்டி தலைவர் ரவி, செயலாளர் பாஸ்கர் ராவ் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !