பிரகாரத்தை சுற்றும் போது சிலர் தன்னைத் தானே சுற்றுகிறார்களே சரியா?
ADDED :2208 days ago
பிரகாரத்தை சுற்றுவதை பிரதட்சிணம் என்றும், தன்னைத் தானே சுற்றுவதை ஆத்ம பிரதட்சிணம் என்றும் சொல்வர். பிரதட்சிணத்தின் போது ஆத்ம பிரதட்சிணம் செய்வது கூடாது. பிரகாரத்தை சுற்றி விட்டு, வழிபாட்டை தொடங்கும் முன் தன்னைத் தானே மூன்று முறை சுற்ற வேண்டும்.