பெங்களூரு தண்டு மாரியம்மன் கோவிலில் சண்டி மஹா யாகம்
ADDED :177 days ago
பெங்களூரு: சிவாஜி நகர் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில், 66ம் ஆண்டு லட்ச லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் சண்டி மஹா யாகம் நடைபெற்றது. யாகத்தை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் தண்டுமாரியம்மன் அருள்பாலித்தார். மஹா யாகத்தில் பூர்ணாஹூதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சண்டி மஹா யாகத்தை சிறப்பாக நடத்திய கோவில் தலைமை அர்ச்சகர் நாகேந்திர பிரசாத் கவுரவிக்கப்பட்டார்.