உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் இந்த மாதம் நடைபெறுமா என்பது குறித்து இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இம்மாதம் 31ம் தேதி வரை பொது மக்கள் அதிகம் கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் 24ம் தேதி அமாவாசையன்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுமா என்பதை இந்து சமய அறநிலைத்துறையினர் வெளியிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !