விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ADDED :2032 days ago
விருத்தாசலம் : சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. ஏராளமான பக்தர்கள் வெளியே காத்திருந்து திரும்பி சென்றனர்.