உழைப்பின் சின்னம்
ADDED :2129 days ago
ஒருநாள் மாலை நேரத்தில் நபிகள் நாயகம் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உழைப்பாளி ஒருவர் பகலில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் அமர்ந்திருப்போரைக் கண்டு வணங்கினார். அவரது கைளைப் பற்றிக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்ட பின் அனுப்பி வைத்தார் நாயகம்.
‘‘சாதாரண உழைப்பாளிக்கு ஏன் இப்படி நன்றி தெரிவிக்கிறீர்கள்?’’ என்று தோழர்கள் கேட்டனர்.
‘‘இவர் சாதாரண மனிதர் தான் என்றாலும் கடும் உழைப்பினால் இவரது கைகள் காய்த்து போய் விட்டன. உழைப்பின் சின்னமான அவரது கைகளுக்கு மதிப்பளிப்பது கடமை’’ என விளக்கம் அளித்தார்.
உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நிகழ்வு இது..