பாம்பு கனவுக்கு பரிகாரம் இருக்கு
ADDED :2046 days ago
கருடனைக் கண்டதும் கிருஷ்ணா கிருஷ்ணா என கன்னத்தில் இடுவது வழக்கம். கருட தரிசனத்தை புனிதமானதாகவும், நல்ல சகுனமாகவும் கருதுவர். வேத ஓசை போலிருக்கும் இதன் குரலை கேட்டால் நன்மை சேரும். பறவை இனத்தின் தலைவன் என்பதால் பட்சிராஜன் என்றும், வினதையின் மகன் என்பதால் வைநதேயன் என்றும் கருடனை அழைப்பர். திருமாலுக்கு தொண்டு செய்வதால் கருடாழ்வார் என்று பெயருண்டு. சனிக்கிழமையில் கருடனுக்கு துளசி அணிவித்தால் நாகதோஷம், கனவில் பாம்புத்தொல்லை, விஷபயம் மறையும்.