ராமேஸ்வரம் கடல் அமைதி ரகசியம்
ADDED :2052 days ago
அனுமத் பஞ்சரத்னம் என்னும் ஸ்தோத்திரம் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்டது. இதைப் பாடியவர் ஆதிசங்கரர். சிவனின் அம்சமாக அனுமன் கருதப்படுவது போல, ஆதிசங்கரரும் சிவாம்சமாக கருதப்படுபவர். ஆக சிவபெருமானை, சிவனே போற்றிப்பாடிய பாடல் இது.
புரதோ மம பாதுஹநுமதோ மூர்த்தி என்று அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார் சங்கரர். இதன் பொருள், என் முன்னால் அனுமனின் திருவுருவம் பிரகாசித்து விளங்கட்டும் என்பதாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் திருத்தலம் ஒன்று உள்ளது. புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலமான ராமேஸ்வரத்தில் சங்கர மடம் உள்ளது. அதன் வாசலில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அவர், கடலை நோக்கி தன் கையை துாக்கியபடி, ஏ சமுத்திரமே, நில்!
என்பது போல காட்சி தருகிறார். அதனால் கடலும், இங்கு அனுமனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி கிடக்கிறது.