உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

திருவண்ணாமலை: உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.

உலக மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரவும், அனைவரும் நலம் பெற வேண்டியும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 30ல், தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று, உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, பங்குனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, 108 சங்காபிஷேக பூஜை நடத்தப்பட்டது. பின்னர், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதால், கோவிலினுள் பக்தர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !