உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு யாக பூஜை

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு யாக பூஜை

தர்மபுரி: உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீள, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது.

தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, உலக மக்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து மீளவும், உயிரிழப்பு ஏற்படாமல் இருக்கவும், பல்வேறு சிறப்பு யாக வேள்வி பூஜை மற்றும் பாராயணம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின், பகல், 12 மணிக்கு மேல், மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த சிறப்பு யாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சண்முகம், கோவில் குருக்கள் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். ஊரடங்கு உத்தரவால் இந்த யாகவேள்வி பூஜை, பக்தர்கள் யாருமின்றி எளிமையாக நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !