நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
ADDED :2046 days ago
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிமுறைப்படி அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவில்களில் சிறப்பு யாகம் மற்றும் பாராயணம் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் வளாகத்தில் அர்ச்சகர்கள், ஒன்பது பேர் மட்டும் அமர்ந்து பாராயணம் செய்தனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.