உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம்

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தன்வந்திரி ஹோமம்

திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட வேண்டியும், உலக நன்மைக்காகவும் தன்வந்திரி ஹோமம் நடந்தது. பத்மாஸனித்தாயார் சன்னதி முன்பு வளர்க்கப்பட்ட யாக வேள்வியில் பழங்கள், வஸ்திரங்கள், மலர்கள், மூலிகை திரவியங்கள், பூர்ணாகுதி பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. இதில் மகா விஷ்ணு யாகம், ஸ்ரீசுத்த தன்வந்திரி நரசிம்ம சுதர்ஸன ஹோமம் உள்ளிட்டவைகளை கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் ஜெயராம், அனந்த நாராயணன், நவநீதன், ரெகுபதி அய்யங்கார், ஸ்ரீனிவாசன், சுதர்ஸன் பாபு உள்ளிட்டோர் செய்தனர். ஏற்பாடுகளை பேஷ்கார் கண்ணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !