உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதம் பரப்புரையை தவிருங்கள்: கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

மதம் பரப்புரையை தவிருங்கள்: கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை

ஈரோடு: அனைத்து மதத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன், டி.ஆர்.ஓ., கவிதா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வகையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. தும்மல், இருமலின்போது முகத்தை மூடி, கைக்குட்டையால் வாயை மூட வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி அல்லது சோப்பு மூலம் கை கழுவ வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, மற்ற நபர்களுடன் பழக வேண்டும். பள்ளிவாசல், தேவாலயங்கள், கோவில்களில் கூடுவதை தவிர்த்து, அவரவர் வீடுகளில் இருந்து, மத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்தை பற்றி வாட்ஸ் ஆப், டுவிட்டர், சமூக வலை தளங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைத்து மத தலைவர்கள், பிரமுகர்கள் ஒத்துழைக்க வேண்டும். ஒரு நபர் கூட பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதால், அரசு உத்தரவுகளை அனைவரும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !