உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்த சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்

சித்ரகுப்த சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.சித்ரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் மட்டும் தனிக்கோவில் உள்ளது. இக்கோவில், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று, சிறப்பு பூஜைகள் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம் நேற்று நடந்தது.காலை 10 மணிக்கு நவகலச மகா அபிஷேகம், மாலை 5 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8.30 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது.சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்த சுவாமியை வணங்குவது விசேஷம் என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 10 ரூபாய் கட்டண வரிசையிலும், பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கோவில் வளாகத்தில், மலர் அலங்காரத்தில் உற்சவ சித்ரகுப்தர், கர்ணகி அம்பாளுடன், மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்கள் தீபம் ஏற்றி, சுவாமியை வழிபட்டனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !