சித்ரா பவுர்ணமியையொட்டி தியாகதுருகத்தில் கிரிவலம்
ADDED :4895 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் பகவதிமலையம்மன் கோவிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகளுடன் கிரிவலம் நிகழ்ச்சி நடந்தது.தியாகதுருகம் நகரை ஒட்டியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மலைமீது நூற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு ஆராதனைகள் செய்து பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசித்து கிரிவலம் வந்தனர். மகா தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்தை விட பக்தர் கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.