வடவெட்டி அங்காளம்மனுக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு ஹோமம்
ADDED :4895 days ago
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து ஊர்வலம் வந்தனர்.இரவு 7 மணிக்கு உலக மக்களுக்கு வருட பலன்கள் கிட்டவும், நலமுடன் வாழவும் வேண்டி, திண்டிவனம் நாகராஜ் அய்யர் தலைமையில் சர்வா ரிஷ்ட்டா சாந்தி ஹோமம் மற்றும் வக்கிர சனி தோஷ நிவர்த்தி ஹோமமும் நடந்தது.பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். இதில் கோவில் அறக்கட்டளை தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.