சித்திரையை வரவேற்கும் மஞ்சள் கொன்றை பூ
ADDED :2016 days ago
உடுமலை: சித்திரை திருவிழாவை வரவேற்கும் வகையில், மஞ்சள் கொன்றை மரங்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன.
முக்கனிகள் வைத்து, மஞ்சள் கொன்றை உட்பட பூக்களால், அலங்கரித்து, வேப்பிலை தோரணம் அமைத்து, சித்திரை முதல் நாளை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். அவ்வகையில், சார்வரி புத்தாண்டு நாளை துவங்குகிறது. சித்திரை முதல் நாளை, வரவேற்கும் விதமாக, மஞ்சள் கொன்றை மரங்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. வழக்கமாக, சித்திரை முதல் நாளில், பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கிராம கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். நடப்பாண்டு, ஊரடங்கால், திருவிழாக்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில், மட்டும் வழிபாடு நடத்த மக்கள் தயாராகி வருகின்றனர்.