/
கோயில்கள் செய்திகள் / அபிஷேகத்தின் போது மந்திரங்களை ஜபிக்காமல் கேசட்டை போட்டுவிடுகிறார்கள். இது சரியான முறையா?
அபிஷேகத்தின் போது மந்திரங்களை ஜபிக்காமல் கேசட்டை போட்டுவிடுகிறார்கள். இது சரியான முறையா?
ADDED :4946 days ago
இதையும் செய்யவில்லையென்றால் எல்லோரும் கதை பேச ஆரம்பித்துவிடுகிறார்களே? பல அர்ச்சகர்கள் உள்ள கோயிலாக இருந்தால் ஒருவர் அபிஷேகம் செய்ய மற்றவர்கள் மந்திர பாராயணம் செய்யலாம். ஒரே அர்ச்சகர் உள்ள கோயில்களில் பாராயணமும் செய்து கொண்டு அபிஷேகமும் செய்யும் பொழுது அவருக்கு சிரமம். சத்தம் போதாததால் பக்தர்களுக்குக் கவனக்குறைவும் ஏற்படுகிறது. எல்லோர் மனதும் ஒரு நிலைப்பட்டு அபிஷேக வழிபாடு செய்வதற்குப் பாராயணம் அவசியம். இதை அர்ச்சகர் மட்டுமே செய்ய வேண்டுமென்பதில்லை. பக்தர்களும் தேவாரம், திருவாசகம் முதலியன பாராயணம் செய்யலாம். இது மிக விசேஷமானது. ஒன்றுமில்லாத பட்சத்தில் கேசட் தான்!