உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கல குங்குமம்

மங்கல குங்குமம்

பெண்களுக்கு மங்கலம் அளிக்கும் ஆன்மிகத்தில் சிறப்பிடம் உண்டு.
* நெற்றியில் குங்குமம் இடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம், லட்சுமிகரமான தோற்றம் உண்டாகும்.
* படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் மூன்றும் சேர்ந்ததே தரமான குங்குமம். இதிலுள்ள மஞ்சள் இரும்புச் சத்தாகவும், படிகாரம் கிருமி நாசினியாக மாறி நன்மை தருகிறது.
* நெற்றி வகிட்டில் இடும் போது மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி பெருகும்.
* மூளைக்கு அதிக உஷ்ணம் செல்லாமல் தடுப்பதோடு குளிர்ச்சியை பாதுகாக்கும்.
* குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.
* சூரியக் கதிர்கள் குங்குமத்தின் மீது படும் போது உடலுக்கு காந்த சக்தி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !