உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதத்தாழ்வார் ஜெயந்தி மாமல்லபுரத்தில் விமரிசை

பூதத்தாழ்வார் ஜெயந்தி மாமல்லபுரத்தில் விமரிசை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் கண்டு, வீதியுலா சென்றார்.


மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், கடந்த அக்., 22ம் தேதி முதல், பூதத்தாழ்வார் ஜெயந்தி உத்சவம் கொண்டாடப்படுகிறது. அவர் தோன்றிய ஐப்பசி அவிட்ட நாளான நேற்று, ஜெயந்தி உத்சவம் கண்டார். மூலவர் திருமஞ்சனம் கண்டு, உற்சவர் ரத்னாங்கி தரித்து, நிலமங்கை தாயார், ஸ்தலசயன பெருமாள் உள்ளிட்ட சுவாமியரை தரிசித்து, மங்களாசாசனம் பெற்றார். ஸ்தலசயனர் பரிவட்ட மரியாதை அளித்து, கைத்தல சேவையாற்றினார். திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட கோவில்கள் சார்பிலும், பரிவட்ட மரியாதை பெற்றார். அவர் தோன்றிய நந்தவனத்தில் ஸ்தலசயனர், பூதத்தாழ்வார் ஆகியோர் திருமஞ்சனம் கண்டு, இரவு வீதியுலா சென்று, 10 நாட்கள் உத்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !