ஆஞ்சநேயர் கோவில்களில் லட்ச தீப விழா ரத்து
ADDED :2005 days ago
திருக்கனுார்: கொரோனா பரவலை தடுக்க, சமூக விலகலை பின்பற்ற வேண்டி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்தக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வாதானுார், கைக்கிலப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று நடை பெற இருந்த லட்ச தீப விழா ரத்து செய்யப்பட்டுள்ளன.