மனநிறைவே மகத்தான செல்வம்
* மனநிறைவே மனிதன் அடைய வேண்டிய மகத்தான செல்வம்.
* விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையுடன் வாழ்ந்தால் உலகத்தை வசப்படுத்த முடியும்.
* கடவுள் கொடுத்ததை மனமார ஏற்று மகிழ்ச்சியுடன் வாழப் பழக வேண்டும்.
* பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
* தர்மம் மனதைத் துாய்மைப்படுத்த உதவும். ஆனால் ஞானம் பெற உதவாது.
* அன்பாக பேசி தர்மச் செயல்களை செய்பவர்களுக்கே புண்ணியம் சேரும்.
* புலன்கள் கட்டுப்பட்டு அமைதியுடன் வாழ்ந்தால் உள்ளத்தில் கடவுளைக் காணலாம்.
* பொருட்பற்று நீங்க வேண்டுமானால் நல்லவர் நட்பை நாட வேண்டும்.
* நல்லதைக் கேட்காவிட்டால் காதுகள் கேட்கும் திறனை இழந்ததற்குச் சமம்.
* இருள் என்னும் அறியாமையை போக்கும் சக்தி ஞானத்திற்கு மட்டுமே உண்டு.
* பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் கடமையில் ஈடுபட்டால் கடவுளருளை பெறலாம்.
* அகந்தை ஒருவரிடம் உள்ள அனைத்து நற்குணங்களையும் அழித்து விடும்.
* துன்பத்தை கண்டு துவளாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வது மகான்களின் இயல்பு.
– சொல்கிறார் ஆதிசங்கரர்