உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலையில் திடீர் பக்தர் கூட்டம் :2 சிவாச்சாரியார்கள் மீது வழக்கு

தி.மலையில் திடீர் பக்தர் கூட்டம் :2 சிவாச்சாரியார்கள் மீது வழக்கு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, திருநேர் அண்ணாமலை கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தில், லிங்கம் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வை தரிசிக்க, திரண்ட பக்தர்களை அனுமதித்தது தொடர்பாக, இரு சிவாச்சாரியார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில், திருநேர் அண்ணாமலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது, தமிழ் புத்தாண்டு தினத்தன்று உட்பட, ஆண்டுக்கு மூன்று முறை, சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடக்கும்.ஏப்ரல், 14ம் தேதி, சூரிய ஒளிபடும் நிகழ்வை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள், திடீரென கோவிலில் குவிந்தனர். திரண்டவர்களை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ, அறநிலைய துறையும், காவல்துறையும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உப கோயில் மணியம், சேகர் கொடுத்த புகாரில், சிவாச்சாரியார்கள் இருவர் மீது திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சிவாச்சாரியார்கள் இருவர், சட்டத்துக்கு புறம்பாக, கோவிலை திறந்து, 25 பேரை உள்ளே அனுமதித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உபகோயில் மணியம் சேகர் கொடுத்த புகாரில், சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என, தாலுகா போலீசார் கூறினர்.

குருக்கள், சஸ்பெண்ட்:
கோவில் இணை ஆணையர் ஞானசேகர் கூறியது:திருநேர் அண்ணாமலை கோவிலில், மக்களை அழைத்து வந்தவர்களுக்கு, சங்கல்பம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. அன்னதானமும் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட ரத்தினகுமார், சிவானந்தம் என்ற, இரு சிவாச்சாரியார்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும், அந்த கோவிலுக்கான குருக்கள், குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !