திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா ஒத்திவைப்பு
ADDED :2007 days ago
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், இம்மாதம் நடக்கவிருந்த தீமிதி விழா கொடியேற்றம், ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், தீமிதி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடந்து, மே மாதம், முதல் வாரத்தில், தீமிதி விழா நடைபெறும்.இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதிப்பர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அரசு, மே 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நடப்பாண்டிற்கான தீமிதி விழா கொடியேற்றம் இம்மாதம் இல்லை.மேலும், ஊரடங்கு உத்தரவு முடிந்த பின், கோவில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, பின்தான், தீமிதி விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.