கோவில் அர்ச்சகர்கள் குடும்பத்திற்கு எம்எல்ஏ நிவாரண உதவி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் உள்ள கோயில் அர்ச்சகர்கள் குடும்பத்தினர் 60 பேருக்கு தொகுதி எம்எல்ஏ தனது சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில, அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு உத்தரவு படி கோயில்களில் தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. கோவில்கள் அனைத்திலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் தினமும் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களின் பணியாற்றும் அர்ச்சகர்கள் குடும்பத்தினர் 60 பேருக்கு மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ., ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார். எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் வாகனங்களில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்று வீடு வீடாக வழங்கியபோது பயனாளிகள் அனைவரும் அரசு அறிவுறுத்தியுள்ள சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்றுக் கொண்டனர்.