சுயம்பு பொய்யாமொழி விநாயகர் சித்திரைத் திருவிழா ரத்து
ADDED :2077 days ago
திண்டிவனம் : திண்டிவனம் அருகே தீவனுாரிலுள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலின், சித்திரை திருவிழா ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் சித்திரை திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. விழாவையொட்டி, வரும் மே 3ம் தேதி விநாயகருக்கு திருக்கல்யாணமும், 4ம் தேதி திருத்தேரோட்டமும், 5ம் தேதி தீர்த்தவாரியும், 6ம் தேதி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் பரம்பரை அறங்காவலர்கள் சகுந்தலாம்மாள், மணிகண்டன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.