கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு பூஜை
ADDED :2015 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் ஜீவசமாதியில் அமாவாசை பூஜை நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சித்தர் ஜீவசமாதியில் பூஜை நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு கோவிலில் உள்ள எருக்கம்பால் சித்தர் பச்சைகேந்திரசுவாமிகள் ஜீவசமாதியில் அமாவாசையை முன்னிட்டு அபிேஷகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது.