உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திரிதியை: அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

அட்சய திரிதியை: அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.

* மகாலட்சுமி தாயே!
திருமாலின் மார்பில்
உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே!
ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில்
உறைந்திருப்பவளே!
மதுர வல்லித் தாயே!
உன்னைப் போற்றுகிறோம்.

* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே!
குலமாதர் போற்றும்
குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே!
நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு

அளிப்பவளே! உன் பாத
மலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே!
அருள் நெஞ்சினர்உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே!

உன் கடைக்கண்
பார்வையால் எங்கள் இல்லம்
செழித்திருக்கட்டும்.
எங்களுக்கு ராஜயோக
வாழ்வைத் தந்தருள்வாயாக.

* பூங்கொடியாகத் திகழ்பவளே!
அலமேலு மங்கைத்தாயே!
மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே!
பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே!
அஷ்டஐஸ்வர்யங்களையும்வாரி வழங்குவாயாக.

* முதலும் முடிவும் இல்லாதவளே!
ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத்
தாங்கும் தயாபரியே!
மகாவிஷ்ணுவின்
இதயக்கமலத்தில்
வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.

* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே!
செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே!
குறையில்லாத வாழ்வு
தரும் கோமளவல்லியே!
செங்கமலத் தாயாரே!
அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!

* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே!
வரம் தரும் கற்பகமே!
சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே!
லோகமாதாவே! உன்
அருளால் இந்த உலகமெல்லாம் செழித்தோங்கட்டும்.
உயிர்கள் எல்லாம்
இன்புற்று வாழட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !