உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அபிஷேகம்

திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அபிஷேகம்

காரைக்கால்:திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் நலன் கருதியும், உலக மக்கள், கொரோனா அச்சுறுத்தல் உள்ள நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து, விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும், நேற்று சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, தேவஸ்தான வலைப்பக்கமான, www.thirunallarutemple.orgல் இணைக்கப்பட்டுள்ள, யூ-டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !