திருப்புல்லாணி கோயில் சித்திரை திருவிழா நிறுத்தம்
ADDED :2025 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுடன் இணைந்த சன்னதியில் பட்டாபிஷேக ராமர் சமேத சீதா பிராட்டியார், பரதன், சத்துருக்கனன், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சைத்ரோத்ஸவ உற்ஸவம் நடக்கும். இந்தாண்டு கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பட்டாபிஷேக ராமருக்கான சித்திரை விழா நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்.29ல் நடக்க இருந்த பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம், திருக்கல்யாண உற்ஸவம், தேரோட்டம் தொடர்ந்து 10 நாட்களுக்கு விஷேச திருமஞ்சனம், வீதியுலா, தீர்த்தவாரி உற்ஸவம், மண்டகப்படி பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.