கொரோனா பரவலை தடுக்க அம்மனுக்கு படையல்
ADDED :2026 days ago
வாலாஜாபாத் : கொரோனாவை விரட்டும் வகையில், அம்மனுக்கு படையலிட்டு, பெண்கள், நுாதன வழிபாடு செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஊராட்சிதோறும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பல சுகாதார தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், வாலாஜாபாத் அடுத்த சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் விதமாக, அங்குள்ள துலுக்காத்தம்மனுக்கு பொங்க லிட்டு, கருவாட்டு குழம்புடன் படையல், குலவை போட்டு, நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும், பெண்கள், இந்த வழிபாட்டால், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என, நம்புகிறோம் என்றனர்.