மன்னிப்பு கேட்ட ஆதிசங்கரர்
ADDED :2300 days ago
ஒருசமயம், ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக வானில் பறந்து சென்ற போது, திரிலோக சஞ்சாரியான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
""அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே? என்று கேட்டார். ""இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்கசெல்கிறேன். நீங்களும் வாருங்களேன், என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர். ""விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல, என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.