உலக நன்மைக்காக காஞ்சிமடத்தில் பூஜை
ADDED :2026 days ago
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக ராமேஸ்வரம் காஞ்சிமடத்தில் புரோகிதர்கள் யாக வேள்வி பூஜை நடத்தினர். உலகை மிரட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நோயில் இருந்து விடுபட்டு, பொருளாதார ரீதியாக மேம்படவும், உலகம் முழுவதும் அமைதி ஏற்பட வேண்டி நேற்று ராமேஸ்வரம் சன்னதி தெருவில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஒரு குண்டத்தில் யாக வேள்வி பூஜை நடத்தினர். இதில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, புரோகிதர்கள் பலர் பங்கேற்றனர்.