மாகாளி அம்மன் டிரஸ்ட் சார்பில் உதவி பணிகள்
ADDED :2026 days ago
மதுக்கரை, க.க.சாவடியிலுள்ள மாகாளி அம்மன் டிரஸ்ட் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. க.க.சாவடியில் மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இதன் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் சார்பில், 175 முதியவர்களுக்கு தினமும் மதியம் முட்டையுடன் உணவு வழங்கப்படுகிறது. மிக ஏழ்மையானவர்களுக்கு தேவையான மருந்துகளும் தரப்படுகிறது., 260 குடும்பத்திற்கு காய்கறி தொகுப்பும் , 400 குடும்பத்திற்கு தலா ஐந்து கிலோ அரிசியும் வழங்கப்பட்டுள்ளது. 3600 முட்டைகள் அனைத்து குடும்பத்திற்கும், 500 பேருக்கு கபசுர குடிநீரும் வினியோகிக்கப்பட்டுள்ளது இந்த உதவி பணிகள் ஊரடங்கு முடியும்வரை தொடர டிரஸ்ட் நிர்வாகிகள் மோகன்குமார். சண்முகசுந்தரம். செந்தில்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர்.