உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 250 குடும்பத்தினருக்கு தருமபுரம் ஆதீனம் நிவாரண உதவி

250 குடும்பத்தினருக்கு தருமபுரம் ஆதீனம் நிவாரண உதவி

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் ஊராட்சியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தினர் 250 பேருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், ஏழைக்குடும்பத்தினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 250 பேரின் குடும்பத்தினருக்கு, தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1000 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகிய நிவாரணப் பொருள்களை வழங்கினார். தருமபுரம் ஆதீன திருமடம் மற்றும் ஏவிசி கல்லூரிச் செயலர் கே.கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம் பி ராமலிங்கம், ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி, மயிலாடுதுறை திமுக ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வர் எஸ்.சுவாமிநாதன், ஆதீன கண்காணிப்பாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா பெரியசாமி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !