சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் திருக்கல்யாணம்
ADDED :2025 days ago
சின்னமனுார், சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையானது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பின்பற்றப்படும் ஆகம விதைமுறைப்படி 6 கால பூஜை, தெப்போற்ஸவம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் நடைபெறும். கொரோனா பரவலை தடுக்க மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சித்திரை திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கை விடப்பட்டன. சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம் மட்டும் எளிய முறையில் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கோயில் அர்ச்சகர்கள் மூலம் காலை 9:30 மணிக்கு மேல் எளிய முறையில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பக்தர்கள் யாருக்கும் அனுமதியில்லையென்று அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.