ராமாயணத்தில் நரசிம்மர்
ADDED :2009 days ago
சீதையை அபகரிக்க ராவணன் நினைத்த போது, அவனது தாய்மாமன் மாரீசன் தடுத்தான். ‘‘ராவணா! நீ சீதையை அபகரிக்க திட்டமிடுகிறாய்! ஆனால் ராமனை யார் என்று நினைத்தாய்? பிரகலாதனைக் காப்பாற்ற சிங்க முகத்துடன் அவதரித்த நரசிம்மரே இப்போது பூமியில் ராமனாக அவதரித்திருக்கிறார்’’ என்றான்.
அதே போல ராமனைச் சந்தித்த சுக்ரீவன் அவரது வீரத்தின் மீது சந்தேகம் கொண்டான். அதைப் போக்கும் விதத்தில் ராமன் விட்ட அம்பு, ஒரே நேரத்தில் ஏழு மரங்களை துளைத்துச் சென்றது. அதைக் கண்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற அவன், ராமனின் பாதம் பணிந்து, ‘நரசிம்ம ராகவா’ என்று சொல்லி வணங்கினான். இப்படியாக ‘ராமனும், நரசிம்மனும் ஒருவரே’ என்பதை ராமாயணம் காட்டுகிறது.