வேலங்குடி சுயம்புநாதர்
ADDED :4945 days ago
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள வேலங்குடி கவுரி அம்மன் சமேத சுயம்புநாத சுவாமி கோயிலே அது. திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு ஜாதக தோஷம் ஏற்பட்டால் இவரை வணங்கி சுகவாழ்வு பெறலாம். இக்கோயில் பல நூறு ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. தற்போது திருப்பணி முடிந்து கவுரி அம்மன், சுயம்புநாத சுவாமி, லட்சுமி நாராயணப் பெருமாள், மாரியம்மன், செல்லி அம்மன், ஐயனார் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் அருகே பெருமாள் கோயிலும் உள்ளது. மகம் நட்சத்தினர் இங்குள்ள கவுரி அம்மனையும், திருவாதிரை நட்சத்திரத்தினர் சிவனையும், திருவோண நட்சத்திரத்தினர் பெருமாளையும் வழிபட்டால் அவர்களுடைய கிரஹ தோஷம் நீங்குகிறது. நாகதோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.