மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தார் கள்ளழகர்
ADDED :2054 days ago
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர், மண்டூக மகரிஷிக்கு சாபம் விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி அழகர் கோவிலில் நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 7ல் வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மண்டூக மகரிஷிக்கு சாபம் விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி அழகர் கோவிலில் கோவில் வளாகத்திற்குள்ளேயே திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக இன்று (மே 8 ம் தேதி) மாலை 4.30 மணி நேரடி நிகழ்ச்சியாக www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக்க மூலமாக, கோவில் நிர்வாகம் சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.