வடவள்ளியில் உலக நலன் வேண்டி வேள்வி
ADDED :2137 days ago
வடவள்ளி: நவாவூர் பிரிவில், உலக நன்மை வேண்டி, ஆவஹந்தி ஹோமம் நடந்தது.
வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவு, குருசாமி நகரில், மாதந்தோறும் காஞ்சி பெரியவரின் நட்சத்திர நாளான, அனுஷம் நட்சத்திர நாளில், ஆவஹந்தி ஹோமம் நடந்து வருகிறது. இம்மாதத்தின் அனுஷம் நட்சத்திரம் நாளான இன்று, ஆவஹந்தி ஹோமம் நடந்தது. ஆவஹந்தி ஹோமம் என்பது, உலக நன்மை வேண்டி செய்யப்படும் ஹோமம் ஆகும். இன்று நடந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு, வெங்கட்நாராயணன் தலைமை வகித்தார். காலை, 6:00 மணிக்கு கோ பூஜையும், 6:45 மணிக்கு, ஆவஹந்தி ஹோமமும், 7:30 மணிக்கு, ருத்ர ஜபம் மஹன்யாசம் நடந்தது. அதனையடுத்து, மாலை, 4:30 மணிக்கு, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமமும் நடந்தது.